தூத்துக்குடி போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை..,

தூத்துக்குடி போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை.., 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டி வந்த இளஞ்சிறார்களின் தந்தை மீது வழக்கு.!
18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி மாநகரில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதை கண்காணிக்க போக்குவரத்து காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி போக்குவரத்து காவலர் மயிலேறும் பெருமாள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சதீஷ், வெங்கடேசன், சண்முகபாலன் மற்றும் போக்குவரத்து போலீசார் அண்ணா பேருந்து நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை, வி இ ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அண்ணா பேருந்து நிலையம் அருகே 18 வயது நிரம்பாத இளஞ்சிறார் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். ஆகவே, தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறாரின் தந்தை அசோக்குமார் என்பவர் மீது மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 25,000 அபதாரம் விதித்தனர்.
அதேபோல, வி இ ரோட்டில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது 18 வயது நிரம்பாத இளஞ்சிறார் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுவனின் தந்தையான தெற்கு புதுத்தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் மீதும் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 25,000 ரூபாய் அபதாரம் விதித்தனர்.
ஆகவே, வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் போக்குவரத்து போலீசார் இந்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
What's Your Reaction?






