பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது கடவுளிடம் வேண்டுகிறேன்.. தூத்துக்குடியில் நடிகர் சிவகார்த்திகேயன்..!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து தெரிவித்தார்.
திருச்செந்தூர் "அருள்மிகு" சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள இன்று திங்கட்கிழமை (06.01.2025) வருகை தந்தார். பேட்டரி கார் மூலம் கோவிலுக்கு சென்ற அவர், கோவிலிலுள்ள மூலவர் சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதனையடுத்து வெளியே வந்த அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் மகிழ்ந்தனர்.
இதனையடுத்து அவர் தெரிவித்ததாவது., அமரன் வெற்றிக்கு நன்றி தெரிவிப்பது முக்கிய கடமையாக உள்ளது. பல வேண்டுதல்களை வைத்துள்ளேன். கோவிலுக்கு வந்தது மிகவும் திருப்தியாக இருந்தது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும், காவல்துறை நடவடிக்கை சரியாக உள்ளது. இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட பெண் பக்கத்தில் நிற்க வேண்டும்.
பெண்களுக்கு தைரியம் வேண்டும். இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?






