தூத்துக்குடி அதிமுக நிர்வாகி தவெகவில் இணைந்தார்..!

Mar 22, 2025 - 13:30
Mar 22, 2025 - 14:16
 0
தூத்துக்குடி அதிமுக நிர்வாகி தவெகவில் இணைந்தார்..!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.!

தூத்துக்குடி, வடக்கு மாவட்ட அஇஅதிமுகவில் தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக கெளதம் பாண்டியன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் இன்று தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இவருடன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளான, அருள் டிக்சன், முனிஸ்வரன், சரண், விக்னேஷ், மாருதி ராஜா, ஹரி நிர்மல், கணேஷ் குமார், மணிகண்டன், ஹரிஹரன், மனோஜ், தமிழ்ச்செல்வன், கார்த்திக், மகாராஜா, அருண்குமார், சுதன், வினோத் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

மேலும், கௌதம் பாண்டியன் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியனின் உதவியாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow