லெட்டர் பேடு கட்சிகளுக்கு பல்லாயிரம் கோடி., "அடேங்கப்பா.,

பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் லெட்டர் பேடு கட்சிகளுக்கு நிதி., கொடையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
2021-22ல் பா.ஜ.க ரூ.739 கோடி, 2022-23ல் ரூ.720 கோடி, 2023-24ல் ரூ.2,244 கோடி என்று ஏராளமாக நிதி திரட்டிய பாஜகவின் வங்கி கணக்கில் இன்று ரூ.7,114 கோடி இருக்கிறது. காங்கிரஸின் கணக்கில் ரூ.857 கோடி இருக்கிறது. தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி, ஒடிசாவில் பி.ஜே.டி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் கட்சி போன்றவையும் கணிசமான அளவு நிதி பெற்றன. ஆனால் பெரிய பெரிய தேசிய, மாநில கட்சிகள் பெற்றதை விடப் பல மடங்கு நிதியை சில்லரை, 'லெட்டர் பேடு' கட்சிகள் பெற்றிருக்கின்றன என்று அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது தி ஹிந்து பிசினஸ் லைன் பத்திரிக்கை.
பெரிய கட்சிகளுக்கு நிதி தருபவர்களுக்கு, அந்தக்கட்சி ஏதாவது மறு உதவி செய்யும் என்று தருபவர்கள் நம்பலாம். சில்லரைக் கட்சிகளுக்கு யார் பணம் தருவார்கள்? எதற்கு?
தேர்தல் ஆணையத்தின் மொழியில் Registered unrecognized political parties (RUPP) எனப்படும் அந்த கட்சிகளை உபயோகமில்லாத லெட்டர் பேடு கட்சிகள் எனலாம். உபயோகமில்லாத கட்சிகள் கூட சாதாரணமாக அல்ல பிரமாண்டமான அளவை நிதி பெறுகின்றன என்று ஆச்சரியமான செய்தியும் வெளிவந்துள்ளது. 3260 க்கும் மேலான இந்த RUPP கட்சிகளுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு நிதி கிடைத்திருக்கும். ரூ.100 கோடி? ரூ.1000 கோடி? ரூ.2000 கோடி? இல்லை அதுபோன்ற தொகைகள் பாஜக, காங்கிரஸ், பி.ஆர்.எஸ், திமுக கட்சிகளுக்கு தான் கிடைக்கின்றன. பதிவு செய்யப்படாத அந்த சில்லறை கட்சிகளுக்கு அந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த தொகை- நம்புவீர்களா? ரூ.10,000 கோடிக்கும் மேல்! அந்த கட்சிகளில் 75% கட்சிகள் தேர்தலில் போட்டி கூட போடவில்லை. 2022-23 அனைத்து பெரிய கட்சிகளுக்கும் கிடைத்த நிதி ரூ.4,858 கோடி. இந்த லெட்டர் பேடு கட்சிகளுக்கு ரூ.6, 116 கோடி. இதை பார்த்தால் நமது நாட்டின் விசித்திரமான அரசியலில் கட்சி தொடங்க பணம் வேண்டும் என்ற நிலை மாறி கட்சி தொடங்கினால் பணம் கொட்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
லெட்டர் பேடு RUPP கட்சிகளுக்கு இப்படி ரூ.10,000 கோடி அளவில் நன்கொடை கிடைக்க காரணம் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் அளிக்கும் வரி விலக்கு தான். சில்லறை கட்சிகளுக்கு நிதி அளிக்கும் கொடையாளர்கள் அதில் கணிசமான தொகையை கருப்பு பணமாக திரும்ப பெற்று விடுகிறார்கள். அங்கீகரிக்கப்படாத RUPP கட்சிகளுக்கு அளிக்கும் நிதிக்கும் சட்டத்தில் வரி விலக்கு உண்டு. ஆனால் வரி விளக்கு பெற RUPP கட்சிகள் தங்களைப் பற்றிய விவரங்கள் கொண்ட படிவங்களை கட்டாயமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கிறது சட்டம். ஆனால் 90% மேலான 3,266 RUPP கட்சிகள் தங்கள் படிவங்களை ஆணையத்திடம் சமர்ப்பிப்பது இல்லை. அதன் விளைவு என்ன? அக்கட்சிகளுக்கு நன்கொடை தருபவர்களுக்கு சட்டப்படி வரி விளக்கு கிடைக்காது. எனவே RUPP கட்சிகள் பெற்ற ரூ.10,000 கோடி நிதியில் 90 சதவிகிததிற்கும் வரி விளக்கு கிடைக்காது. வரியை ஏற்பதற்காகவே ரூ.10,000 கோடி மோசடி நடந்திருக்கிறது.
தங்க நிதியில் ஒரு பங்கை கருப்பு பணமா திரும்ப பெறுவது பணமாற்று சட்ட குற்றம். இந்த ரூ.10,000 கோடி மோசடி வரி எய்ப்பு மட்டுமல்ல, பணம் மாற்ற சட்டப்படி பெரும் குற்றம். இந்த மோசடியை தீர விசாரணை செய்து, இந்த வரி எய்ப்பு, பணமாற்று சதியில் ஈடுபட்ட லெட்டர் பேடு RUPP கட்சிகள் அதற்கு நிதி தந்து அதை திரும்ப பெற்ற கொடையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
What's Your Reaction?






