திமுக நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்..!

Mar 22, 2025 - 13:51
Mar 22, 2025 - 13:57
 0
திமுக நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்..!

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரநத்தத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதியும் தொழிலதிபருமான சண்முகராஜ் பாஜகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேகரநத்தத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சண்முகராஜ் இவர் அப்பகுயில், திமுக ஒன்றிய பிரதிநிதியாக இருந்து வந்தார். இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் ஆழ்வை கிழக்கு மண்டல துணைத்தலைவர் மாரிதங்கம் ஏற்பாட்டில் திமுகவில் தாம் வகித்த அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பதவியில் இருந்து விலகி சண்முகராஜ் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்தநிகழ்வின் போது, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, உமரி சத்தியசீலன், மாவட்டத் துணைத்தலைவர் சிவராமன், செல்வராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாலாஜி, கனல் ஆறுமுகம், ஸ்ரீவைகுண்டம் மண்டல தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow