Retro: கண்ணாலே பேசும் பூஜா ஹெக்டே.. Gunனால பேசும் சூர்யா.. ‘ரெட்ரோ’வாக மாறிய ரோலக்ஸ்.. தாறுமாறு!

சூர்யாவின் வரவிருக்கும் படமான சூர்யா 44, ரெட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது தலைப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து அளித்துள்ளார். ஏக்கம் மற்றும் நவீன சினிமாவைக் கலந்து ஒரு பரபரப்பான அனுபவத்தை இந்தப் படம் உறுதியளிக்கிறது.

Dec 26, 2024 - 16:14
 0  1
Retro: கண்ணாலே பேசும் பூஜா ஹெக்டே.. Gunனால பேசும் சூர்யா.. ‘ரெட்ரோ’வாக மாறிய ரோலக்ஸ்.. தாறுமாறு!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் சூர்யாவை தமிழ் சினிமா இயக்குநர்கள் எப்படி காட்ட வேண்டும் என கிளாஸே எடுத்திருப்பார். ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரம் கேமியோவாக வந்தே கதிகலங்க வைத்திருப்பார் சூர்யா. ஆனால், சிறுத்தை சிவா கங்குவா எனும் மெகா பட்ஜெட் படத்திலேயே சூர்யாவை அந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்த தவறியதுதான் ரசிகர்களை கடுப்பாக்கியது.

இந்த கிறிஸ்துமஸ்க்கு சூர்யா ரசிகர்களுக்கு இதை விட செம ட்ரீட் வேறு எதுவும் இருக்காது என்றே சொல்லலாம். சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் ஓபனிங் சீனில் இருந்தே ஒவ்வொரு காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. 

சூர்யாவின் 'ரெட்ரோ': கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 44வது படத்துக்கு 'கல்ட்', 'ஜானி' உள்ளிட்ட டைட்டில்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இறுதியாக தற்போது 'ரெட்ரோ' எனும் பக்காவான டைட்டிலை சூர்யா படத்துக்கு சூட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சூர்யாவின் லுக்குக்கு இந்த டைட்டில் செமையா இருக்கு என ரசிகர்கள் ரெட்ரோ டைட்டிலை லைக் செய்து வருகின்றனர்.

கண்ணால் பேசும் பூஜா ஹெக்டே: தமிழில் முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே இந்த படத்தில் கவர்ச்சி பொங்க நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்திக் சுப்புராஜ் பூஜா ஹெக்டேவின் கேரக்டரை சூப்பராக மாற்றி வடிவமைத்து ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஒரு வசனம் கூட பேசாமல் சூர்யாவின் கோபத்தை ஒரே ஒரு முத்தத்தால் குறைத்து கண்ணாலே பேசும் காட்சிகள் டைட்டில் டீசரில் அட்டகாசம்.

அடுத்த ரோலக்ஸ் ரெடி: ரோலக்ஸ் மாதிரி இருக்கும் சூர்யாவை எப்படி பூஜா ஹெக்டேவின் காதல் அமைதியாக்குகிறது. அதன் பின்னர் மீண்டும் அவர் எப்படி வெடிக்கப் போகிறார் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைனாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு இந்த ரெட்ரோ ரோல் அல்வா சாப்பிடுவது போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக சூர்யா பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்பது கன்ஃபார்ம்.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow