வசமாய் சிக்கிய எம்எஸ் தோனி? ராஞ்சி வீட்டால் பிரச்சனை.. ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் போட்ட உத்தரவு

தோனியின் வீட்டு மனை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் வீட்டுவசதி வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி விதிமுறைகளின் கீழ் சொத்து தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைத் தீர்மானிப்பது விசாரணையின் நோக்கமாகும்.

Dec 26, 2024 - 16:07
 0
வசமாய் சிக்கிய எம்எஸ் தோனி? ராஞ்சி வீட்டால் பிரச்சனை.. ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் போட்ட உத்தரவு

ராஞ்சி: ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு சொந்தமான வீட்டை விதிகளை மீறி வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. டி20 உலககோப்பை, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி் என்று ஐசிசியின் மூன்று வடிவ கோப்பைகளையும் வென்று தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமை தோனியிடம் மட்டும் தான் உள்ளது.

தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் அவரது ரசிகர் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை. அதேபோல் கடைசி கட்டத்தில் அவரது அதிரடி ஆட்டம் என்பது தொடர்ந்து வருகிறது. இதனால் சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எம்எஸ் தோனியை Uncapped பிளேயராக ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் வரும் ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது எம்எஸ் தோனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட்டாகும். தோனி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் ஹர்மு ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு அமைந்துள்ள இடம் என்பது ஜார்கண்ட் வீட்டு வசதி வாரியம் தோனிக்கு வழங்கி இருந்தது. அதாவது தோனி கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த அர்ஜுன் முண்டா தான் வீட்டு வசதி வாரியம் சார்பில் வழங்கியிருந்தார். இந்த நிலம் மொத்தம் 10 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும்.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow