நடிகர் விஜய் பூர்வீகம் தூத்துக்குடியா ? வெளிவராத உண்மை..!

Feb 4, 2025 - 00:12
Feb 4, 2025 - 07:35
 0
நடிகர் விஜய் பூர்வீகம் தூத்துக்குடியா ? வெளிவராத உண்மை..!

தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவரும், நடிகர் விஜய் பூர்வீகம் தூத்துக்குடி அருகே உள்ள கொம்பாடி கிராமம் என வெளிவராத தகவல்கள் வெளிவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி என்ற ஓர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்த கிராமம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்-ன் தந்தை இயக்குனர் S.A சந்திரசேகரின் சொந்த கிராமம் என்று வெளிவராத தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த கிராமத்தில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 75 ஆவது பவள விழா கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட பவள விழா மலர் மூலமாக இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை காலம் வரை இந்த கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் சேனாதிபதி பிள்ளை ரெயில்வேயில் பணிபுரிந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரமக்குடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொம்பாடி கிராமத்தில் இன்னும் எஸ்.ஏ. சந்திரசேகர் உறவினர்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீடு, நிலங்களும் அங்கு உள்ளன.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் திரைப்பட துறையில் சாதித்தது தங்களது கிராமத்திற்கு பெருமை என்றும், தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர் அக்கிரமத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow