மக்கள் குறைகளை மனுவாக அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ புலம்பல்..!

மக்கள் குறைகளை திமுக அரசிடம் மனுவாக அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ புலம்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக ஊர்வசி செ. அமிர்தராஜ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் கட்சி நிர்வாகிகளிடம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ் ஆளுங்கட்சி செயல்பாடுகள் குறித்து புலம்பி தீர்த்துள்ளார்..
ஆம், அவர் கூறியதாவது: எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறை, குறை இருக்கத்தான் செய்யும். சட்டமன்றத்தில் திமுக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தாலும், மனுவாக அளித்தாலும் செய்து கொடுக்கிறேன் என்று மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே நடைமுறைப்படுத்தவில்லை. எந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டாலும் இதுதான் நிலைமை.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் காங்கிரசை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மதச்சார்பின்மை, சமூக நீதி இந்த கொள்கை மிக முக்கியம் என்பதில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் என்று பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் சில தினங்களுக்கு முன்பு 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற புதிய கோஷத்தை முன்னெடுத்தார். இது, தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஊர்வசி செ. அமிர்தராஜ் மக்கள் குறைகளை திமுக அரசிடம் மனுவாக அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
What's Your Reaction?






