விண்வெளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 200க்கும் மேற்ப்பட்டோர் கைது..!

குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக சுமார் 1000 ஏக்கர் விவசாய மற்றும் கிராமப்பகுதியின் இடங்களை கையகப்படுத்துவது குறித்து கடந்த 20.01.2025 ஆம் தேதி நாளிதழில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இந்த விண்வெளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள ஆதியாகுறிச்சி, வெங்கட்ராமானும்புரம், மாதவன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் இன்று உடன்குடி மெயின் பஜாரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
What's Your Reaction?






