மீண்டும், மீண்டும் குற்றம் செய்தால் மரண தண்டனை சட்டபேரவையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றம்..

Jan 10, 2025 - 12:55
 0
மீண்டும், மீண்டும் குற்றம் செய்தால் மரண தண்டனை சட்டபேரவையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றம்..

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுபடுத்த சட்டபேரவையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது...

BNS, BNSS மாநில சட்டதிருத்தம், தமிழக 1998 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கும் தடை சட்டம் ஆகிய சட்ட திருத்தம் சட்ட பேரவையில் முன் வைக்கப்பட்டது. இச்சட்டம் ஒரு மனதாக சட்டபேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(சட்டத்திருத்தம்) தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் திருத்த சட்டம், 2025 ஆம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கும் தடை திருத்த சட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் 

(பிரிவு - 64 ( 1 ) பாலியல் வண்புணர்ச்சி 

முன்பு - 10 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல்.,

தற்போது - 14 ஆண்டுக்கு குறையாக கடுங்காவல்)

(பிரிவு 64 ( 2) காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வண்புணர்ச்சி 

முன்பு - 10 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் 

தற்போது - 20 ஆண்டுக்கு குறையாக கடுங்காவல்) 

(பிரிவு 65 ( 2) 12 வயதுக்குட்பட்ட பெண்ணை வன்புணர்ச்சி குற்றத்தை செய்கின்ற நபர்கள் 

முன்பு - 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் அல்லது ஆயுள் சிறை தண்டனை, மரண தண்டனை 

தற்போது - ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை)

(பிரிவு 66) வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர் 

முன்பு - 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் 

தற்போது - ஆயுள் தண்டனை)

பிரிவு 70 (2) கூட்டு வன்புணர்ச்சி மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி 

முன்பு - ஆயுள் சிறை 

தற்போது - மரண தண்டனை)

பிரிவு 71

மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்த குற்றவாளிகள் 

முன்பு - ஆயுள் அல்லது மரண தண்டனை 

தற்போது - மரண தண்டனை.,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow