500 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் முருகன் வேடமணிந்து உடலில் திருநீறு பூசிக்கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை..,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள். அலகு குத்தியும் காவடி எடுத்தும் வந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இத்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருவிழா தைப்பூசம், ஆங்கில புத்தாண்டு தைப்பொங்கல் ஆகிய நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவார்கள்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் முருகன் வேடமணிந்து உடலில் திருநீறு பூசிக்கொண்டு பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் சிவன், பார்வதி, முருகன், அர்த்தநாதீஸ்வரர், சுடலை போன்ற வேடங்கள் அணிந்தும் அலகு குத்தியபடியும், காவடி எடுத்தும் பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க திருச்செந்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
What's Your Reaction?






