தவெக தலைவரும், நடிகருமான விஜய் பற்றி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நச் பதில்..

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்-ன் அரசியல் குறித்து பேசினார்..!
ஜன சேனா நிறுவன தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று முதல் (பிப்ரவரி 13) தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கின்றார். இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சனாதான யாத்திரை இது அல்ல. 10 வருடத்தற்கு முன் வந்தேன். அதன் பின், நான்கு வருடமாக அறுபடை வீடுகளுக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். தற்போது வந்திருக்கின்றேன்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? நடிகர் விஜய் குறித்து இதற்கு முன் ட்விட்டரில் பதிவு செய்திருந்தேன். தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அது நடக்கட்டும் என்றார். மேலும், இவருடன், மகன் அகிலா நந்தன் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?






