அடிதடி, ஆலந்தா கிராமத்தில் பதட்டமான சூழல்.. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

Feb 9, 2025 - 18:34
Feb 9, 2025 - 18:40
 0
அடிதடி, ஆலந்தா கிராமத்தில் பதட்டமான சூழல்.. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆலந்தா கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை.. காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.. 

நடந்தது என்ன..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவருக்கு அங்கு தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து ஒரே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் சுந்தர்ராஜ் மீது தனிப்பட்ட ஓர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6ந் தேதி சுந்தர்ராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்த பொண்ணு சாமி மகன் பரமசிவம் (34), செல்வராஜ் மனைவி பேச்சியம்மாள் (40), மாடசாமி மகன் (29), பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக, சமுத்திர லட்சுமி புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சுந்தர்ராஜ்-ன் இரண்டு வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மேலும், அதுபோல பட்ட முத்து மகன் மாயாண்டி (52), வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

அந்த கிராமத்தில் கடுமையான சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டும் இதுவரை காவல்துறையினர் யாரையும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குமுறுகுன்றனர். 

தென் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றால் அது தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஆலந்தா கிராமத்தில் சட்டம்,  ஒழுங்கு பிரச்னை நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் இதில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், தொடர்ந்து காவல்துறை அமைதி காத்தால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பாக உள்ளதாக பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow