மதிமுக 32 ஆம் ஆண்டு தொடக்க விழா.., தூத்துக்குடியில் கட்சியினர் கோலாகல கொண்டாட்டம்.

May 6, 2025 - 19:51
May 6, 2025 - 19:53
 0
மதிமுக 32 ஆம் ஆண்டு தொடக்க விழா.., தூத்துக்குடியில் கட்சியினர் கோலாகல கொண்டாட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 32 ஆம் ஆண்டு தொடக்க விழா தூத்துக்குடியில் கட்சியினர் கொடியேற்றி, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவு பெற்று 32 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் கோலாகலமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் பறக்க விடப்பட்டு கொடிக்கம்பத்தில் மதிமுக கொடியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 32ஆம் ஆண்டு தொடக்க விழாவை பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை வாழ்த்தியும், கட்சியின் முதன்மைச் செயலாளரும் துரை வைகோவை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், வடக்கு மாவட்ட அவை தலைவர் பேச்சிராஜ், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ரஞ்சன் உட்பட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow