புதிய கல்விக் கொள்கையால் தமிழ் மொழி அழிந்துவிடும்-அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.!

Feb 21, 2025 - 13:20
Feb 21, 2025 - 13:25
 0
புதிய கல்விக் கொள்கையால் தமிழ் மொழி அழிந்துவிடும்-அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.!

புதிய கல்விக் கொள்கையால் தமிழ் மொழி அழிந்துவிடும். தமிழ் மொழியை காத்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்-சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பேச்சு.!

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிக்கான பேச்சு போட்டி தூத்துக்குடி தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திமுக மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டைன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகள் மத்தியில் பேசுகையில், சமூகநீதி சமத்துவம், திராவிட மாடல் ஆட்சியில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அனைவராலும் வாழ்த்தப்படுகிறது, உலக அளவில் பறைசாற்றப்படுகிறது என்பதை முறியடிக்க வேண்டும் பெருமை பேசப்படக்கூடாது என்பதற்காகவே ஒன்றிய அரசு இடைஞ்சல்கள் தந்து கொண்டு இருக்கிறது. கல்விக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது, பேரிடரை சந்திக்க நிதி ஒதுக்கீடு கிடையாது. எந்த அளவுக்கு நம்மளை ஒதுக்க முடியுமோ, சுதந்திரத்தை பறிக்க முடியுமோ அதை செய்து கொண்டிருக்கின்றார்கள். 

புதிய கல்விக் கொள்கை பார்த்தீர்கள் என்றால் அதில் உள்ள சரத்து இந்தி, ஆங்கிலம் மட்டுமே, வேண்டுமானால் தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி யாரும் பேசுவதில்லை, மராட்டிய மாநிலத்தில் மராட்டி யாரும் பேசுவதில்லை, அந்த மொழிகள் எல்லாமே அழிந்துவிட்டது. ஆகவே, நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த அந்த பெருமை பற்றி விளங்கிய செம்மொழி அந்தஸ்து பெற்ற உயிரினும் மேலான தமிழ் மொழியை காத்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow