பள்ளியில் அதிரடி காட்டிய ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர்.!

Mar 12, 2025 - 17:54
Mar 12, 2025 - 18:03
 0
பள்ளியில் அதிரடி காட்டிய ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர்.!

ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் ஆட்சியர் இளம் பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 2 இளம் சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 

இதுகுறித்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் SC/ST Act 1989ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தனர். இதில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு தலைவர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பங்கேற்ற நிலையில மாணவர்கள் முன்னிலையில் சாதிய பாகுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் படிக்கும் போது என்னென்ன பிரச்னைகள் வரும், வேலைக்கு செல்லும் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில், பள்ளி வளாகத்தில் ஜாதி குறித்து மாணவர்கள் எந்த கருத்தும் பேசக்கூடாது, ஜாதி குறித்த எழுத்துக்கள் அடையாளங்கள் எழுதக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகளில் வரையப்பட்டிருந்த ஜாதிய அடையாளங்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து அனைத்து எழுத்துக்கள் மற்றும் அடையாளங்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் அழித்தனர்.

மேலும் பள்ளியில் இருந்து தான் இதுபோல் குற்ற சம்பவங்கள் தொடர ஆரம்பிக்கிறது. அதை ஆசிரியராகிய நீங்கள் முதலில் தடுத்து நிறுத்தி இது தவறு என்பதை புரிய வைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow