தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..!

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் கிரிக்கெட் வீரராக உருவாக்கி வருகிறது தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம். அதேபோன்று தூத்துக்குடியில் சிஎஸ்கே டி டி சி ஏ டிராபிக் 2025 என்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியானது, த்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் அல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிரிஷ்பின் முன்னிலையில் நடைபெற்றது. டிலைட் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
20 ஓவர் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சென்ட்.ஆன்ஸ் பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி, கீழ ஈரால் ஆக்சிலியம் பள்ளி, கோவில்பட்டி பிருந்தாவன் கிட்ஸ் யூனிவர்சிட்டி பள்ளி, மேல ஈரால் வி எம் ஏ ஆர் ஹிந்து நாடார் நடுநிலைப்பள்ளி, சென்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளி, ஆறுமுகநேரி கமலாவதி மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி ரவீலா வித்யாலயா உள்ளிட்ட 16 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியும் புனித அன்னாள் பள்ளியும் விளையாடின. போட்டியில் அழகர் பள்ளி அணி 116 ரன் எடுத்தது. எதிர்த்து விளையாடிய புனித அன்னாள் பள்ளி அணி 87 எடுத்தது 27 ரன் வித்தியாசத்தில் அழகர் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் வீரர்களுக்கும் டிலைட் பப்ளிக் பள்ளி தலைவர் ஜெயசீலன், தாளாளர் பிரபாகரன் ஜான் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள்., ஜோன்ஸ் விக்டர், டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், ஒயிட் பீல்டு ஆர்தர், ஜெயசீலன், ராமையா, இணைச் செயலாளர் சுப்பிரமணியன், உதவிச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் கணேஷ் குமார் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






