புனித வெள்ளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்.. பாஜக மாநில தலைவரிடம் மனு.!

இயேசு கிறிஸ்து மரித்த தியாக பெருநாளான புனிதவெள்ளி தினத்தில் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என அமலோற்ப மாதா மதுவிலக்கு சபையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை-யை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.!
அமலோற்ப மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு சார்பில் சபையின் பொறுப்பாளர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், ரஸ்டன், மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிதேலிஸ் மற்றும் பாஜக சிறுபான்மை அணி நிர்வாகிகள் ஆகியோர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டின் பெயரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை-யை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மார்ச் 5ம் தேதி தவக்காலம் ஆரம்பமானது. கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளியை ஏப்ரல் 18ம் தேதி தியாகம் மற்றும் அமைதி நாளாக சபைகள் கடந்து ஒட்டுமொத்தமாக அனைத்து கிறிஸ்தவ மக்களும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நாளில் மதுக்கடைகளை மூட வேண்டி 2022 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்சிடம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். தமிழ்நாடு டாஸ்மாக் வாணிப கழகத்தின் மாநிலம் மற்றும் மாவட்டத்தின் அரசு தரப்பில் இருந்து மதுக்கடைகளை மூடுவது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்று அவர் கூறி வருகிறார்.
ஆகவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயிலாக, தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கொள்கை முடிவில் மாற்றம் செய்ய தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
What's Your Reaction?






