தலைவர் விஜய்யை 2026ல் முதல்வராக அரியணையில் ஏற்றுவது தான் எங்களது முதற்கட்ட பணி என தவெக நிர்வாகி கூறினார்.!

தலைவர் விஜய்யை 2026ல் முதல்வராக அரியணையில் ஏற்றுவது தான் எங்களது முதற்கட்ட பணி என தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகி கூறியுள்ளார்..
தூத்துக்குடி மாநகரில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் பல்வேறு மக்கள் பணிகளை ஆற்றி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் மருத்துவ முகாமானது தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16.02.2026) நடைபெற்றது.
கண் பரிசோதனை, எலும்பு நோய் பரிசோதனை, பொது நோய் பரிசோதனை உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில், தூத்துக்குடி மாநகரில் 5 இடத்தில் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று மருத்துவ முகாம் நடைபெற்றுது. மக்கள் பணியாற்றுவதுதான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் படியாகும். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவது தான் எங்களது முதல் கட்ட பணியாகும் என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






