ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிய வேண்டும்.. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் நல அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.!
இதுகுறித்து மக்கள் நல அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்ததாவது, ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 2018 மே 22 அன்று தன்னெழுச்சியாக நடைபெற்ற பேராட்டத்தில் 14 அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன அதன்பிறகு தமிழக அரசும், உச்சநீதிமன்றமும் ஆலையை திறக்க தடைவிதித்து கடந்த 7வருடங்களாக மூடி இருக்கும் நிலையில் ஆலையை திறக்க வேண்டும் என தற்போது ஆலை நிர்வாகத்தின் தூண்டுதல் படி போராடுவது பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமான உள்நோக்கம் உள்ளதாக தோன்றுகிறது. மேலும் அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் எதிரானதாகவும் உள்ளது.
ஆகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது தேசபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?






