தூத்துக்குடி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.!

Jan 25, 2025 - 11:49
 0
தூத்துக்குடி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.!

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரியில் தேசிய வாக்காளர் உறுதிமொழி மற்றும் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது..

தூத்துக்குடி, ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் பெண்கள் கல்லூரியில் தேசிய வாக்காளர் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உளவியல் நிபுணர் சாம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு தேர்தல் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். "நம் ஒட்டு நம் கடமை" குடிமக்கள் அனைவரும் வாக்களிப்பது நமது முக்கிய கடமையாகும் என்றும் மாணவிகள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

பின்னர், கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் துணை முதல்வர் மதுரவல்லி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, உறுதிமொழியை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow