மாணவ, மாணவியருக்கு கண் திரை பரிசோதனை செய்யும் மிஷின் விரைவில்.. லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை கூறினார்..!

Jan 25, 2025 - 08:50
 0
மாணவ, மாணவியருக்கு கண் திரை பரிசோதனை செய்யும் மிஷின் விரைவில்.. லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை கூறினார்..!

தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கண் திரை பரிசோதனை செய்யும் மிஷின் விரைவில் கொடுக்கப்பட உள்ளது-லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை பேட்டி..!

தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப் தொடங்கி 66வது ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (24.01.2024) நடைபெற்றது. தூத்துக்குடி பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவியானது, லயன்ஸ் கிளப் தலைவர் சுரேஷ், செயலாளர் திவாகர், பொருளாளர் எட்வின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்..

இதனைத் தொடர்ந்து, லயன்ஸ் கிளப் கவர்னர் அய்யாதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த இயக்கம் 107 ஆண்டுகளாக சேவை ஒன்றுக்காகவே தொடங்கப்பட்ட இயக்கம் உலகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மையில் இருப்பது லயன்ஸ் கிளப் இயக்கம் தான்.  

உலகளவில் 270 நாட்டில் 48 ஆயிரம் சங்கங்கள் இருக்கிறது அதில் தூத்துக்குடி லயன்ஸ் சங்கம் முதன்மையான சங்கம். தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். இந்தநிலையில் ஏழை, எளிய சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மழை, வெயில் காலங்களில் தற்காத்து கொள்ள நிழற்குடை வழங்க உள்ளோம்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிழற்குடை கொடுக்க உள்ளோம். 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். கேரளாவில் உள்ள லைன்ஸ் கிளப் சார்பாக 5 கோடி ரூபாய் கொடுத்து வீடு, வாசல் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.. மேலும், தூத்துக்குடியில் கடந்த மழை வெள்ள பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ வசதி, தையல் மிஷின், மெடிக்கல் கேம்ப் செய்து கொண்டு இருக்கின்றோம். 

மேலும், பள்ளி மாணவ, மாணவியருக்கு அடுத்த மாதம் கண் திரை பரிசோதனை செய்யும் மிஷின் கொடுக்கப்பட உள்ளோம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow