தேசவிரோதி யார்? நயினார் நாகேந்திரன் பதிலால் அதிர்ச்சி..!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்த அனைவரும் எதிர் அணியில் ஒன்று சேர வேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணம்.,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தேன். அப்போது கட்சி மற்றும் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள். கூட்டணியில் குழப்பம் உள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? உங்கள் கேள்வியில் தான் குழப்பம் உள்ளது என்றார்..
தீவிரவாத தாக்குதலை அரசியலாக்க பாஜக முயற்சிக்கிறது என்று கனிமொழி நேற்று பேட்டி அளித்திருந்தார்.. அது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? முதலில் தேச பற்று வேண்டும். நம் நாட்டில் இருந்து கொண்டு வேறு ஒரு நாட்டை பற்றி பேசினால் தேசத்துரோகம் தான், பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தானி யர்கள் கூட இந்த நாடு வேண்டாம், மோடி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். நம் நாட்டில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிராக பேசுபவர்களை என்ன சொல்ல முடியும் தேச விரோதிகள் என்று தான் சொல்ல முடியும்.
தமிழக அரசு காலணி என்ற அந்த வார்த்தையை நீக்கியுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? காலனி என்ற வாக்கியம் நீக்க வேண்டியது நல்ல விஷயம்., அதே மாத்ரி இன்னும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதனை கட்டுப்படுத்த வேண்டும், ஆனால் அவர் கட்டுப்படுத்தவில்லை என்றார்..
What's Your Reaction?






