கண்மணிராசா எழுதிய 'கூத்து' சிறுகதை தொகுப்பு குறித்து இலக்கிய ஆர்வலர்கள் பேச்சு.!

Apr 29, 2025 - 12:53
Apr 29, 2025 - 12:58
 0
கண்மணிராசா எழுதிய 'கூத்து' சிறுகதை தொகுப்பு குறித்து இலக்கிய ஆர்வலர்கள் பேச்சு.!

கண்மணிராசா எழுதிய 'கூத்து' சிறுகதை தொகுப்பு குறித்து இலக்கிய ஆர்வலர்கள் அருமை பேச்சு.!

போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'வாசகம்' என்ற உரையாடல் நிகழ்வானது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வைத்து நடைபெற்றது. எழுத்தாளர் தங்கத்துரையரசி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் கண்மணிராசா எழுதிய 'கூத்து' சிறுகதை தொகுப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இலக்கிய ஆர்வலர்களான, போன்சாய் புக்ஸ் ப்ரியதர்ஷினி, சிறார் எழுத்தாளர் வரகவி முருகேசன், ஜீவா சுரேஷ், மாரிச்செல்வி, மகாலட்சுமி, இந்துமதி, எழுத்தாளர்கள் ராம்சித்ரா, பொன்னு லட்சுமி, மழயிசை, உஷா, பத்மா சிங்கராயன், முகிலன், முத்து முருகன், தினகரன், குமரேசன், செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொகுப்பிலுள்ள கதைகள் குறித்துப் பேசினர். 

கல்லூரி முதல்வர் காமராஜ் கருத்துரைக்க, கவிஞர் மாரிமுத்து நன்றியுரை கூறினார். மேலும், ஒரு படைப்பு குறித்த சில கருத்துக்களை கூறியது மகழ்ச்சி அளிப்பதாகவும் இலக்கிய ஆர்வலர்கள் கூறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow