ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு.., விஜய் தூத்துக்குடி வருகை.. வீடியோ வெளியிட்டு பிரச்சாரம்..!

May 5, 2025 - 13:34
May 5, 2025 - 13:46
 0
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு.., விஜய் தூத்துக்குடி வருகை.. வீடியோ வெளியிட்டு பிரச்சாரம்..!

தவெக தலைவர் விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சார வீடியோ.., ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட போது நடிகர் விஜய் தூத்துக்குடி விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பண உதவி வழங்கினார்.. வீடியோவில் காண்பிக்கப்பட்டு பல்வேறு தரப்பு மக்களை கட்சியில் இணைக்க வீடியோ வெளியிடு..!

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய்க்காக விஜய்யின் ரசிகர்களால் ஒரு பிரச்சார வீடியோ ஒன்று தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் வைத்து வெளியிடப்பட்டது. வில்லன் நடிகர் உறியடி சங்கர்தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவில் ஒரு தரப்பினர் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை தூக்கி எறிந்து பின்னர் கொடியை தீ வைக்க முற்படுகின்றனர். அப்போது உடனடியாக ஒருவர் வந்து அதனை தடுத்து நமக்காகத்தானே அவர் கட்சி ஆரம்பித்து உள்ளார்.. ஆகவே அவருடன் சேர்ந்து நாம் பயணிப்போம் எனவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் போராட்டத்தில் கடைசி நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்  சூடப்பட்டனர். அப்போது உடனடியாக நடிகர் விஜய் தூத்துக்குடிக்கு விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பண உதவி வழங்கி ஆறுதல் கூறினார். இவ்வாறு நமக்காக நடிகர் விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வில்லன் நடிகர் உறியடி சங்கர்தாஸ் மற்றும் இந்த வீடியோவை இயக்கிய ஸ்டார் பாபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வில்லன் நடிகர் உறியடி சங்கர்தாஸ் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அரசியலில் பயணிக்க முடியாத நண்பர்களால் இந்த பிரசார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே களத்தில் மக்களுக்காக பிரச்சாரம் செய்யக்கூடிய காணொளியை வெளியிட்டுள்ளோம்.

கட்சியின் தலைமை கழகம் ஒப்புதல் இல்லாமல் தான் இந்த வீடியோவை நாங்கள் தயாரித்துள்ளோம். முழுக்க, முழுக்க இந்த வீடியோவை ரசிகர்களாகவே தயாரித்து உள்ளோம் என்றார்..

இந்த வீடியோவை வெளியிடும் போது, உடன் நடித்த பாபு கணேசன், பாலா, சிவா, அழகர், தங்கராஜ், வசந்த் உள்ளிட்ட விஜய் ரசிகர்கள் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow