பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார்..!

Jan 25, 2025 - 07:58
Jan 25, 2025 - 08:22
 0
பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார்..!

பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற முத்துக்குமரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து விடுதிகள் அருகே வந்த போது முத்துக்குமரனை கண்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எந்தவித தயக்கமும் காட்டாமல் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தேன். திருச்செந்தூர் முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தான் இன்று முருகனுக்கு நன்றி கூறுவதற்காக திருச்செந்தூர் வந்துள்ளேன் என்று கூறிச் சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow