மாமன்ற உறுப்பினர்களை குழப்பிய தீர்மான நகல்., என்ன நடந்தது.!

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு., அதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.!
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றிற்கான வரிகளை கடுமையாக உயர்த்தி தீர்மானம் இருந்தது.
தூத்துக்குடி மாநகராட்சியில், ஏற்கனவே சொத்து வரி, தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனை கண்டித்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மேலும், மாநகராட்சியில் எந்த ஒரு தீர்மானமும் தமிழில் தான் அச்சிடப்படுவது வழக்கம்., ஆனால், இன்று குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கட்டண உயர்வு கொண்டு வரும் போது அந்த இரண்டு தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது மாமன்ற உறுப்பினர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. மேலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பேசும் திமுக மாநகராட்சியில் இவ்வாறு ஆங்கிலத்தில் தீர்மானம் அடித்து கொடுத்திருப்பது எந்த வகையில் சரி..
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் முதல் முறையாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






