கனிமொழி எம்பிக்கு சரமாரியாக கேள்வி? பாஜக தலைவர் அண்ணாமலை.!

உங்க பையன் மட்டும் சிங்கப்பூரில் மற்ற மொழிகளை படிக்கலாம். எழை மாணவர்களுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.. கனிமொழி எம்பிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி.!
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2006 To 2014-ஐ கனிமொழி அவர்களே மறந்து விட்டார். 8 வருடத்தில் அவருடைய பிரெயினில் அம்னீஷியா வந்து விட்டது. 675 கோடி ரூபாய் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கினீர்களே., 75 கோடி தானே தமிழுக்கு ஒதுக்கினீர்கள். அதற்கு பதில் இல்லையே, உங்களுடைய ஆட்சியில் நீங்கள் செய்தது தவறு., பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழை எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.
அரசியல் காரணத்திற்காக அக்கா கனிமொழி பேசிக் கொண்டிருக்கின்றார். கனிமொழி அக்கா பையன் சிங்கப்பூர் சிட்டிசன்., உலகத்தரம் வாய்ந்த நாட்டில் அவர் படித்து கொண்டிருக்கின்றார். சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கும் மகன் தமிழில் மட்டும் தான் படிக்க வேண்டும் என கேட்பீர்களா? அத்தனை மொழியையும் மகன் படிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மட்டும் இரண்டு மொழி தான் படிக்க வேண்டும் என கனிமொழி அக்கா மைக் பிடித்து கூறுவது நியாயமா?
இவ்வாறு பேசும் அக்கா கனிமொழி ஏன் அரசுப் பள்ளியில் அவர் மகனை படிக்க வைக்கவில்லை. மொழியைப் பற்றி அவ்வளவு பேசும் கனிமொழி, பெரியார் பேத்தி என கூறும் கனிமொழி, கலைஞர் கருணாநிதி மகள் என கூறும் கனிமொழி, அவருடைய குழந்தைக்கு சிங்கப்பூர் சிட்டிசனாக ஒரு நியாயம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் அரசு பள்ளிகளில் இரண்டு மொழி தான் படிக்க வேண்டும் என கூறுவது ஒரு நியாயமா என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்..
What's Your Reaction?






