தமிழக முதல்வர் பெண்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார். ஆர் எஸ் பாரதி பேச்சு.!
தமிழகத்தில் பிரபாகரனை ஒரு வழக்கில் கைது செய்த போது ஜாமினில் கொண்டு வந்தவன் தான் இந்த ஆர் எஸ் பாரதி.., கோவில்பட்டியில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு..!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நகர கழகத் திமுக சார்பில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி ஆர் பேசுகையில்: தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டும் ஏனென்றால் தமிழக காவலர் யாரும் அங்கு போக முடியாது. துணைவேந்தரின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் உள்ளது.
தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சிறப்பு சட்டங்களை கொண்டு வந்தார் திமுகவை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை அதனால் தான் சீமான் மூலமாக எதிர்க்க பார்க்கின்றனர். சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை தான் தற்போது சீமான் வைத்துக் கொண்டு ஆடுகிறார்
பிரபாகரன் போட்டோவில் தானும் இருப்பது போல் காட்டிக்கொண்டு இருப்பவர் தான் சீமான்., தமிழகத்தில் பிரபாகரனை ஒரு வழக்கில் கைது செய்த போது ஜாமினில் கொண்டு வந்தவன் தான் இந்த ஆர் எஸ் பாரதி என்றார்..
முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் : பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்களுக்கு தமிழகத்தில் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார் தமிழக முதல்வர், மேலும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார் என்றார்..
What's Your Reaction?