மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

Jan 19, 2025 - 13:20
 0
மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசு மாற்றன் தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு நிதி வழங்கி வருகிறது-நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி குழு நிர்ணயம் செய்துள்ள அளவை விட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம். நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நுட்பமான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வில்லை. மாற்றன் தாய் மனப்பான்னமயுடன் நிதி வழங்கி வருகிறது.  

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும், வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏற்ப நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் சிறிய அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பயணிகள் விமானத்தில் பயணிக்கின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் இது அதிகரிக்கும்.

தமிழகத்தில் நடக்கும் மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு பணியை துவக்கி வைத்தது, ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 26 ஆயிரம் ரூபாய் கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது.

தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 15 சதவீதம் மட்டுமே நிதி பங்கீடு வழங்கியுள்ளது. டெல்லி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுடன் ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம் 1,300 ஏக்கர் கொண்ட மிகவும் சிறியதாக உள்ளதால் பரந்தூர் விமான நிலையம் அவசியமாக உள்ளது. பரந்தூர் விமான நிலையம் சம்பந்தமாக மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். விஜய் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டு அரசிடம் தெரிவித்தால் அரசு சரி செய்வது குறித்து ஆராயும் என்றார்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow