தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை..!

Jan 23, 2025 - 16:43
Jan 23, 2025 - 17:08
 0
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை..!

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை..!

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூருவிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்தத் தகவலின் படி விமான நிலைய இயக்குனர் ராஜேஷ் உத்தரவுப்படி விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் இரண்டு மோப்ப நாய்கள் விமான நிலைய வளாகப் பகுதி விமான நிலைய பயணிகள் செல்லும் பகுதி விமான ஓடு பாதை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி இதேபோன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்றும் அதேபோல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow