தூத்துக்குடி புனித செபஸ்தியார் கெபி திருவிழாவை முன்னிட்டு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..!
தூத்துக்குடி, மறக்குடி தெருவில் உள்ள புனித செபஸ்தியார் கெபி திருவிழாவை முன்னிட்டு சுமார் 500 பேருக்கு அன்னதானம்; ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் பங்குத்தந்தை ஸ்டார்வின் வழங்கினார்.
தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள புனித செபஸ்தியார் கெபி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நேற்று (21.01.2025) செவ்வாய்க்கிழமை துவங்கியது. பனிமய மாதா கோவில் பங்குத்தந்தை ஸ்டார்வின் கலந்துகொண்டு உலக நன்மைக்காக ஜெபமாலை ஜெபம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பங்குதந்தை ஸ்டார்வின் வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு தலைமையில், செயலாளர் சசிகுமார் முன்னிலையில் 3 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மத்திய நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எல். எட்வின் பாண்டியன் மற்றும் மறக்குடி தெரு இளைஞர்கள், மகளிர்கள் சிறப்பாக செய்திருந்தனர்..
What's Your Reaction?






