ஆணவம், அதிகாரம் அனைத்தும் முடியப் போகின்றது. அமைச்சர் கீதாஜீவனுக்கு எச்சரிக்கை விடுத்த தவெக நிர்வாகி.!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவனை தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.!
தவெக தலைவர் விஜய் அறிக்கையின் வாயிலாக மட்டும் அரசியல் நடத்தாமல் மக்களை சென்று நேரடியாக சந்திக்க வேண்டும், தமிழக அரசின் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறியுருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தலைவர் "தளபதியார்" தமிழ்ச் சினிமாவில் உச்சப்பட்ச நடிகராக இருந்து, பல நூறு கோடிகள் சம்பாத்தியத்தை விட்டு விட்டு, தன்னுடைய சொந்த பணத்தில் மக்களுக்காக சேவை செய்து, அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே, உங்கள் முதலமைச்சர் யார்? அவர் தொலைக்காட்சி தொடரில் நடிக்கவில்லையா?
முதலமைச்சர் அவர்கள் வாரிசு, துணை முதலமைச்சர் யார்? அவருக்கு நடிக்க தெரியுமோ தெரியாதோ? அவர் எங்கு இருந்து வந்தார்? ஏன் நடிகர்களுக்கு நாடாள தகுதி இல்லையா? வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ... என்று வீண் பேச்சு பேசாதீர்கள்.
தமிழகத்திலும் சரி, தூத்துக்குடியிலும் சரி குடும்ப அரசியல் செய்து, மக்கள் வரிப்பணத்தில் தங்கள் குடும்பத்தை வளர்த்த, நீங்கள் எல்லாம் எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் "தளபதியார்" அவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை...
உங்களையெல்லாம் நம்பி உங்கள் பின்னால் நிற்கும் உங்கள் தொண்டர்கள் தான் பாவம். அவர்களால் இந்த மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரோ? அல்லது ஒரு மேயரோ? அல்லது உங்கள் கழகத்தில் ஒரு மாவட்ட செயலாளராகவோ அல்லது முக்கிய பதவிகளில் ஏதாவது ஒரு பதவி வாங்க முடியுமா?
இதற்கெல்லாம் பதில் உண்டா? அமைச்சர் அவர்களே. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்து தூத்துக்குடி தொகுதிக்கு இதுவரை தாங்கள் என்ன செய்து உள்ளீர்கள்? ஒரு கனமழை வந்தால் தூத்துக்குடி தாங்க முடியாத சூழ்நிலையில் தான் இன்றளவும் உள்ளது.
இதற்கெல்லாம் மாண்புமிகு அமைச்சர் அவர்களே தாங்கள் என்ன செய்துள்ளீர்கள்? நல்லாட்சி என்றால் என்ன? என்று 2026ல் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கழகத்தலைவர் "தளபதியார்" அவர்கள் முதல்வராக அரியணை ஏறும்போது, நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கூடிய கூட்டமோ, அல்லது தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிகளில் கூடுகின்ற கூட்டமோ, தங்கள் கட்சியைப் போல பணத்திற்காகவோ பொருளுக்காகவோ கூடிய கூட்டம் அல்ல... எங்கள் கழகத்தலைவர் "தளபதியார்" மீது பற்று கொண்ட எழுச்சிக்கூட்டம் என்பதை நாடறியும்..
மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டுள்ளார்கள். தங்களுடைய ஆணவம் அதிகாரம் அனைத்தும் முடியப் போகின்றது. தூத்துக்குடியின் வாரிசு அமைச்சர் கீதாஜீவன் அவர்களை, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் என கூறியுள்ளார்.
What's Your Reaction?






