தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன், தூத்துக்குடியில் பரபரப்பு பேச்சு.!

Feb 28, 2025 - 11:48
Feb 28, 2025 - 12:00
 0
தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன், தூத்துக்குடியில் பரபரப்பு பேச்சு.!

தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக கனிமொழி-யும் எமாற்றியுள்ளார் என திண்டுக்கல் சீனிவாசன், தூத்துக்குடியில் உளறல் பேச்சு.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் VVD சிக்னல் அருகே நடை பெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், வாரிசு அடிப்படையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தின் இரண்டு சபைக்கும் தலைவராக இருக்கிறார். அவரது அப்பாவுக்கு இணையான டி.ஆர். பாலு அவர்களை புறம் தள்ளிவிட்டு வாரிசு என்கிற அடிப்படையில் டெல்லியில் அத்தனைக்கும் தலைவர் நான் என்று நடக்கிறார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என்பதை கனிமொழி உணர்ந்து இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்த சண்டாள பாவிகள் ஆட்சியில் தினசரி கெலைகள், கொள்ளைகள் நடப்பது போல, கற்பழிப்பு நடப்பது போல தங்கம் விலை எங்கு போய் நிற்கப் போகிறது என்று தெரியவில்லை.   

வேண்டுமானால் நம் பிள்ளைகளுக்கு பெயர் வைத்துக் கொள்ளலாம் தங்கத்தாய், தங்கப்பன், தங்கராசு,பவுன் தாய், பவுன் அம்மா என்று பெயர் வைத்து கூப்பிட்டு கொள்ளலாமே தவிர ஒரு போட்டு தங்க நகை வாங்க முடியாது. எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாகிறது. ஸ்கூல் அருகில் கூலிப் விற்பனை செய்யப்படுகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பல்லுக்கு இடையே அதை இடுக்கி கொண்டு அனைத்து தவறுகளும் செய்கின்றனர். படிக்கும் சகோதரிகளை, குழந்தைகளை 5 பேர், 10 பேர் சேர்ந்து கேவலப்படுத்துகின்றனர்.

மேலும், எப்படி 525 வாக்குறுதிகளை 2021 தேர்தலில் எடப்பாடி கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரோ, அதே போல கனிமொழி பாராளுமன்ற தேர்தலுக்கு 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்று வரை ஏமாற்றியுள்ளதாக திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். தற்போது இந்த பேச்சு சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow