சேகர் பாபு நமக்கு பிடித்த ஏழரை பாபு என கடுமையாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சாடியுள்ளார்..!

Jan 24, 2025 - 15:53
Jan 24, 2025 - 15:59
 0
சேகர் பாபு நமக்கு பிடித்த ஏழரை பாபு என கடுமையாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சாடியுள்ளார்..!

பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு சேகர் பாபுவை நமக்கு பிடித்த ஏழரை சேகர்பாபு என கடுமையாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சாடியுள்ளார்..

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரிட்டாப்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி.,

பழனியில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இந்துமத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருகிறது. 

திமுக கட்சி மாநாடு நடைபெறும் போது தொண்டர்களுக்கு அளிக்கும் உணவு குறித்து அனுமதி பெற்று தான் மாநாடு நடத்துகிறீர்களா? மேலும் நம்மை பிடித்த ஏழரை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, அவர் இந்துவே கிடையாது, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்து கொண்டு 'அல்லேலுயா' என்று கோஷமிட்ட போதே அவரது பதவியை பறித்திருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சகம் கிரிப்டோ கையில் மாட்டிக் கொண்டு சீரழிகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது ஒரு இந்துவின் கடமை என்கிற அடிப்படையில் யாரிடமும் அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவோம்.

திருப்பரங்குன்றம் மலையில் 50 சென்ட் நிலமானது வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று அறிவித்திருப்பது தவறு, 1931 ஆம் ஆண்டு ப்ரிவியூ கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டபடி திருப்பரங்குன்றம் கோவிலை முறையாக பாதுகாக்க வேண்டும். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஹிந்து, முஸ்லிம் மோதலை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சி என்பது மனிதநேயமே இல்லாத கட்சியாகும் என்று கடுமையாக சாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow