தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூட்டம் தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.!

Jan 24, 2025 - 09:48
Jan 24, 2025 - 10:03
 0
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள்  கூட்டம் தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் நடத்தி வரும் கேபிள் ஆபரேட்டர்கள் நூற்றுக்கணக்கானோr கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர்.  

தமிழக அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கேபிள் இணைப்பை வழங்க வேண்டும், புதிய செட்டாப் பாக்ஸ் அனைத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின், கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை சிவா உள்ளிட்ட அதிகாரிகள் ஆபரேட்டர்கள் நலனில் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow