அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பதவியில் இருந்து தூக்க வேண்டும்.. பெரியாரிய சிந்தனையாளர்கள் போர்க்கொடி.!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்-அம்பேத்கரிய, பெரியாரிய உணர்வாளர்கள் போர்க்கொடி.!
தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ச்சியாக பல வருடங்களாக இலங்கை பேரினவாத அரசால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாட்டில் பெரியார் சிந்தனைகளுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை புகுத்தி தமிழ்நாட்டை சமத்துவம் இல்லாமல் சீரழிக்க நினைக்கும் கூட்டங்களை பற்றியும், பெரியாரை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற ஒரு சில பாலியல் கயவர் கூட்டங்களை பற்றி எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்க கோருவது சம்பந்தமாக இன்று (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த சந்திப்பிற்கு முன்பாக திமுகவுக்கு நேர் எதிராக இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்த பத்து நபர்களோடு பேசிக்கொண்டு சிரித்து மகிழ்ந்து கொண்டு இருந்தார். அதற்கு முன்பாகவே பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையுள்ள தோழர்கள் அவரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை.
அதுமட்டுமல்ல, அவர்கள் அவரை சந்திப்பதற்கு வரவேற்பு அரையில் காத்து கொண்டிருக்கின்ற போது அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை உள்ளே அழைத்திருக்கிறார். அப்போது அந்த நேரத்தில் பெரியாரிய அம்பேத்கர் உணர்வாளர்கள் நாங்கள் உங்களை பார்க்க வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் எங்களை அழைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார்கள் அவருடைய உதவியாளரிடம் சொல்லிக் கொண்டு இவர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் நீங்கள் ஏன் உள்ளே வந்தீர்கள்? எனது கட்சிக்காரர் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் பெரியாரிய அம்பேத்கர் உணர்வாளர்கள் நாங்கள் வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது ஐயா உங்களை சந்தித்து இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைகளை கூப்பி சரி சரி போயிட்டு வாங்க அப்புறம் பார்க்கலாம் என்று வீட்டிற்கு வெளியே பிச்சை எடுக்கும் ஒரு நபரை பார்த்து வேண்டாதவிருப்பாக சொல்வதைப் போல சொல்லி அனுப்பி இருக்கிறார்.
இது பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர்களுக்கு பெருத்த அவமானத்தை தந்திருக்கின்றது. தந்தை பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் அரசு நடந்து கொண்டிருக்கிறது. அந்த அரசில் அங்கம் வகித்து பலனை அடைந்து கொண்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பெரியாரிய, அம்பேத்கரிய உணர்வாளர்களை அவமதித்த செயல் கண்டனத்துக்குரியது.
எதிர்க்கட்சிகளோடு தொடர்பிலிருந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வழக்கமாக தான் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதியை எப்படியாவது கைப்பற்றி தான் உயிரோடு இருக்கும் வரை அந்த தொகுதியில் ராஜாவாக வளம்வர வேண்டும் என்ற நோக்கத்தில் பெரியாரிய, அம்பேத்கர்ரிய சிந்தனையாளர்களை கூட சந்திக்க வேண்டாம் என்று தனக்கு வேண்டப்பட்ட சாதிய சிந்தனையாளர்களையும், எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களை மட்டும் சந்தித்து ஓட்டுக்காக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிற அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை உடனடியாக தமிழ்நாடு அரசு கண்டித்து பதவி விலக செய்ய வேண்டும்.
இல்லை என்றால் வரும் காலங்கள் திருச்செந்தூர் தொகுதி மட்டுமல்ல தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய அம்பேத்காரிய உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பாடத்தை புகட்டுவார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய கூட்டமைப்பு சார்பாக கூறியுள்ளனர்..
What's Your Reaction?






