தூத்துக்குடி ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் அலட்சியம்.!

30 ஆண்டு கோரிக்கைக்கு ஒரே நாளில் தீர்வு கண்டதாக மாவட்ட ஆட்சியரை மக்கள் கொண்டாடிய நிலையில் ஒரே நாளில் அவரது உத்தரவை மதிக்காமல் சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள்..!
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு நேற்று முன்தினம் வந்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தனது அதிரடி ஆய்வின் மூலம் ஆறு பேருந்துகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் தொலைதூரப் பேருந்துகள் உட்பட 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் கூடுதலாக நேற்று வந்து சென்றுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை காற்றில் பறக்கவிடும் விதமாக இன்று அதிகாலையில் மட்டும் மூன்று அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் புதுக்குடி வழியாக நேரடியாக சென்றது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் போக்குவரத்து கழகத்தினரின் தொடர் அலட்சியத்திற்கு எதிராக கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் நீதிமன்றத்தை நாடவும் அப்பகுதி மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
What's Your Reaction?






