2000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆட்டைய போட்டாரா? மவுனம் கலைத்த அமைச்சர்.!

May 6, 2025 - 13:48
May 6, 2025 - 14:06
 0
2000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆட்டைய போட்டாரா? மவுனம் கலைத்த அமைச்சர்.!

தூத்துக்குடியில்,1,000க்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்..!

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை சுமார் 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தூத்துக்குடி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் முதல் கட்டமாக 3,500 மீனவர் தொழிலாளர்களுக்கு  வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று 2ம் கட்டமாக 1,000 மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை மீனவர்களுக்கு வழங்கினார்..

தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, மீனவர்களுக்கு வர வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்து வருகிறார். மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார். மேலும், பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 

மேலும், நான் 2000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்டதாக செய்தி வருகிறது. எனக்கே தெரியாமல் இடம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. பொய்யான செய்தி பரப்பப்படுகிறது, ஆகவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் கீதாஜீவனின் மகன் பெயரிலான Nice Salt நிறுவனத்திற்காக 2000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்த நிலையில் தற்போது அமைச்சர் கீதாஜீவன் இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow