நிலப் பிரச்னை தொடர்பாக பொய் புகார்., சாத்தான்குளம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு.!

Jan 24, 2025 - 14:49
 0
நிலப் பிரச்னை தொடர்பாக பொய் புகார்., சாத்தான்குளம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு.!

நிலப் பிரச்னை தொடர்பாக பொய் புகார் பதிவு செய்ததாக சாத்தான்குளம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், தட்டார் மடம் அருகே உள்ளது சாலைப்புதூர் கிராமம். இங்கு இசக்கிமுத்து என்பவருக்கு சொந்தமாக 31 செண்டு நிலம் உள்ளது. இந்த நிலத்தை மகன்களான செம்புலிங்கம், சுயம்பு, லிங்கதுரை, செல்வராஜ் ஆகிய 4 மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செல்வராஜ் என்பவருக்கு 10 சென்ட் நிலம் பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில், 7 சென்ட் நிலத்தில் லிங்கதுரை என்பவர் வீடு கட்டியுள்ளார். இதில், வீட்டை பராமரிப்பதற்காக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி லிங்கத்துரை மகன்களான, ஹைகோர்ட் ராஜா (வழக்கறிஞர்), இன்பரசன், வசந்த் மற்றும் கட்டிட தொழிலாளிகள் மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த லிங்கதுரை சகோதரர் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பராமரிப்பு வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிங்கதுரை மகன்கள் மற்றும் கட்டிட வேலைக்கு வந்தவர்களை கற்கள் மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். மேலும், கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

மேலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். இதில், போலீசார் வழக்கு பதிவு செய்ததால் முன்ஜாமீன் பெற்றுள்ளோம். இந்த சம்பவத்தில் எங்கள் இடத்தில் பராமரிப்புக்காக சென்ற எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது..

இதனை ரத்து செய்து குற்றம் செய்த செல்வராஜ் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சரியான விசாரணை நடத்த பட வேண்டும். ஆனால், சாத்தான்குளம் டிஎஸ்பி சூபக்குமார், இன்ஸ்பெக்டர் அனிதா, ஆகியோர் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகவே, டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் அவர்களிடத்தில் மனு அளித்தனர்.

மேலும், இது தொடர்பாக, தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம், சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகம், தென்மண்டல ஐஜி அலுவலகம், திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow