தூத்துக்குடியில், குடியரசு தின விழா ஒத்திகையில் தீவிரமாக ஈடுபடும் காவல் துறையினர்..!
குடியரசு தின விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், காவல் துறையினர், ராணுவ வீரர்கள், வாசிக்கும் பேண்ட் வாத்தியம் இசைத்து ஒத்திகை நடத்தப்பட்டது..!
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மதுவிலக்கு டிஎஸ்பி அருள் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை ஆண், பெண் காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சைனிக் பள்ளி மாணவர்கள் ராணுவ வீரர்கள் வாசிக்கும் பேண்ட் வாத்திய இசையை இசைத்து ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஊர் காவல் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையினர், சாரண இயக்க மாணவர் படையினர் ஆகியோர் பங்கேற்றனர்..
What's Your Reaction?