கிராம சபை கூட்டம் நடத்தாததை கண்டித்து கிராமத்தில் கருப்பு கொடி.!

Jan 26, 2025 - 13:30
Jan 26, 2025 - 13:37
 0
கிராம சபை கூட்டம் நடத்தாததை கண்டித்து கிராமத்தில் கருப்பு கொடி.!

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது பொட்டலூரணி கிராமம். இந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நான்கு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காரணம், இக்கிராமத்தில் கழிவு மீன்களை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் மூன்று நிறுவனங்கள் உள்ள நிலையில், உற்பத்தி நடக்கும் நேரங்களில் மக்கள் வாழ முடியாத அளவிற்குக் கொடிய நாற்றம் வீசுகிறது. நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன, கழிவு நீரை, டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து இரவு நேரங்களில் ரவுடிகளின் துணையோடு குளங்களிலும், விவசாய நிலங்களிலும் ஊற்றிவிடுகின்றனர். ஆகவே இந்த மீன் கழிவு நிறுவனங்களை மூட வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில், கிராமசபை கூட்டத்தை நடத்தினால் கழிவுமீன் நிறுவனங்களை மூடச் சொல்லும் தீர்மானத்தைக் கொண்டுவந்து தீர்மானப் பதிவேட்டில் பதியச் சொல்வார்கள் என்பதால் இன்றளவும் புறக்கணித்து வருவதாக அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். 

எனவே, பொட்டலூரணியில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதைப் புறக்கணித்து வரும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும், பாராமுகமாக இருந்துவரும் தமிழக அரசை கண்டித்தும் பொட்டலூரணி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் சுவரொட்டி ஒட்டியும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow