டங்ஸ்டன் சுரங்கம் ரத்து., பொட்டலூரணி கிராம மக்கள் கொண்டாட்டம்.!
![டங்ஸ்டன் சுரங்கம் ரத்து., பொட்டலூரணி கிராம மக்கள் கொண்டாட்டம்.!](https://thupparithal.com/uploads/images/202501/image_870x_6794837f9e4d4.jpg)
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பொட்டலூரணி மக்கள்..!
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் தீய நாற்றம் வீசிவரும் மூன்று கழிவு மீன்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மூடக்கோரி ஒட்டுமொத்த மக்களும் நான்கு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், தொல்வியல் சிறப்பும் பல்லுயிர்ப் பெருக்கமும் நிறைந்த, மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டிப் பகுதியில் டங்ஸ்டன் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் வலுவானதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அரசு திரும்பப் பெற்றது.
மக்கள் போராட்டம் வெற்றிபெற்றதை வரவேற்கும் முகமாகக் கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான பொட்டலூரணி போராட்டக் குழுவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
What's Your Reaction?
![like](https://thupparithal.com/assets/img/reactions/like.png)
![dislike](https://thupparithal.com/assets/img/reactions/dislike.png)
![love](https://thupparithal.com/assets/img/reactions/love.png)
![funny](https://thupparithal.com/assets/img/reactions/funny.png)
![angry](https://thupparithal.com/assets/img/reactions/angry.png)
![sad](https://thupparithal.com/assets/img/reactions/sad.png)
![wow](https://thupparithal.com/assets/img/reactions/wow.png)