20 ரூபாய்க்கு பிரியாணி சாத்தியமா? உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய முன் வர வேண்டும்..!

Jan 27, 2025 - 13:59
Jan 27, 2025 - 14:10
 0
20 ரூபாய்க்கு பிரியாணி சாத்தியமா? உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய முன் வர வேண்டும்..!

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படுவதால் இதன் தரத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உணவில் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாகவே மாறிவிட்டது. எதில் லாபம் சம்பாதிக்கலாம், எவ்வாறு சம்பாதிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம், எதில் மாட்டிக்கொள்ளாமல் லாபம் சம்பாதிக்கலாம் என திட்டம் போட்டு உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து சம்பாதிப்பது வாடிக்கையாகவே உள்ளது. இதற்கு சாட்சி, தூத்துக்குடியில் பல்வேறு கடைகளில் உணவு தரம் இல்லாமல் இருந்த காரணத்தினால் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளுக்கு சீல் வைக்கும் சம்பவம் நாம் அறிந்ததே.,

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தூத்துக்குடி நகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்பது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறி தான்? பொதுமக்களும் இது சாத்தியமா? என குழம்பி போய் உள்ளனர். 

அப்படி 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படுவதால் வியாபாரிகளுக்கு சிறிதாக லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என, பொது மக்களுக்கு குறைந்த விலையில் பிரியாணி விற்கப்பட்டாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அதன் தரம் இருக்க வேண்டும்.

ஆகவே, உணவு பாதுகாப்பு துறையினர் 20 ரூபாய்க்கு விற்கும் பிரியாணி கடைகள் அனைத்திலும் தரமான பிரியாணி விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் கோரிக்கையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow