இன்பநிதி வந்தால் துன்பநிதி தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு..!

Jan 26, 2025 - 18:18
Jan 26, 2025 - 18:22
 0
இன்பநிதி வந்தால் துன்பநிதி தான் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு..!

200 இடங்களை வெல்வோம் என்று திமுக மாயை உருவாக்க முயற்சி செய்கிறது. இதற்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு.!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில், உதயநிதிக்கு அப்புறம் இன்பநிதி. இந்த நிதி வருவதால் மக்களுக்கு துன்ப நிதிதான் வந்து சேரும். ஜல்லிக்கட்டு போட்டியின் போது இன்பநிதி வந்ததும் மாவட்ட ஆட்சியர் எழுந்திருக்க வேண்டிய நிலை. திமுகவில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். இது ஆச்சரியமான விஷயம் இல்லை.

திமுக போன்று தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதிமுக மக்களை ஏமாற்ற வில்லை. தேர்தல் வாக்குகளை கொடுத்து மக்களுக்கு திமுக நாமம் போட்டுள்ளது. 2026ல்தான் திமுகவிற்கு மக்களின் முடிவு தெரியும். ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை திமுக ஆட்சிக்கு வராது. 

200 இடங்களை வெல்வோம் என்று திமுக மாயை உருவாக்க முயற்சி செய்கிறது. இதற்கு மக்கள் மயங்க மாட்டார்கள். திமுக ஆட்சியின் மயக்கத்தில் இருந்து மக்கள் தெளிந்து விட்டார்கள். திமுக ஆட்சி விடியல் ஆட்சி இல்லை விடியா ஆட்சி, இந்த ஆட்சி ஒழிந்தால்தான் நமக்கு விடிவு கிடைக்கும் என்று மக்கள் நினைத்துவிட்டனர். 2011ல் ஏற்பட்ட அரசியல் திருப்பு முனை 2026ல் தமிழகத்தில் நிச்சயமாக வரும். 200 இடங்களை தாண்டி அதிமுக வெற்றி பெறும். சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் கெட்டுப் போய் உள்ளது. இளைஞர்கள் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow