மீனவர்களின் வலைகளை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்.!

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கடற்கரையில் மீனவர்களின் வலையை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களால் மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கடற்கரையில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இதன் அருகே மீனவர்கள் வலை பின்னும் மற்றும் பழுது பார்க்கும் கட்டிடமானது உள்ளது. இந்த கட்டிடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) காலை மீன் பிடித்து விட்டு வலைகளை பிரான்சிஸ், சேசு ராஜா, மாணிக்கம், சதீஷ், பிரகாஷ், சேவியர் ஆகியோரின் வாவல் மீன், கனவா மீன், முரல் மீன் வலைகளை வைத்திருந்தனர். அப்போது மதியம் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வலைகளுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த மீனவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில், வலைகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு 4 லட்ச ரூபாய் ஆகும் நிலையில், இந்த சம்பவத்தால் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
What's Your Reaction?






