ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்.., மாநகராட்சி கண்டுகொள்ளுமா?

Jan 21, 2025 - 08:57
Jan 21, 2025 - 09:06
 0
ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்.., மாநகராட்சி கண்டுகொள்ளுமா?

தூத்துக்குடி மாநகர், கருத்த பாலம் அருகே ரோட்டில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என  பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஒட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தூத்துக்குடி மாநகராட்சி, கருத்த பாலத்தில் இருந்து 2ம் கேட் செல்லும் மெயின் ரோட்டில் ஆண்டாள் தெரு, அருகே பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி ரோடு முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் நடந்து செல்லக்கூட முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும், அவ்வழியாக நடந்து செல்கின்ற பொதுமக்கள் மீது வாகனத்தில் செல்பவர்கள் கழிவுநீரை தெறித்து விடுவதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. 

எனவே, பாதாள சாக்கடையை உடனே சீரமைத்து சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அன்றாடம் அந்த சாலையில் பயணம் செய்பவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow