மாதம் 30 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு.., சரக்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போர் கொடி..

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருப்பூருக்கு இறக்குமதி சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள் சரக்கை இறக்கி விட்டு காலியாக திரும்ப வேண்டும். மாறாக, திருப்பூரில் இருந்து குறைந்த வாடகையில் ஏற்றுமதி சரக்கை ஏற்றி செல்கின்றனர். இது குற்ற செயல் என்ற போதிலும் இது தொடர்ந்து வந்தது.
இதனால் திருப்பூர் கண்டெய்னர் லாரிகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. சுங்க வரித்துறை விதிகளை மீறி கண்டெய்னர் லாரிகளை இயக்குவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில், சரக்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி வ உ சி துறைமுகம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்..
இதனைத் தொடர்ந்து, ஏற்றுமதி சரக்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பரமசிவம் கூறுகையில், துறைமுகத்தில் இருந்து இறக்குமதி சரக்கை கொண்டு வரும் லாரிகள் ஏற்றுமதி சரக்கை ஏற்றி செல்ல கூடாது. அவ்வாறு விதிமுறைகளை மீறி ஏற்றி செல்வதால் கண்டெய்னர் லாரிகள் இயக்கம் பாதிக்கப்படும். பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது.
மேலும், இவ்வாறு லாரிகள் மூலம் சரக்கு கொண்டு செல்வதால் அரசுக்கு மாதம் 30 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.. சுங்கவரித்துறை விரிவான கள ஆய்வு நடத்தி விதிமுறை மீறிய சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
What's Your Reaction?






