"சாதிய வன்மத்திற்கு எதிராக களமாடியவர்..." - நல்லகண்ணுவுக்கு விஜய் வாழ்த்து
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய நல்லகண்ணு, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக விஜய் வாழ்த்து தெரிவித்தார். நல்லகண்ணுவின் முயற்சிகள் பலரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கான போராட்டத்தில் உத்வேகம் அளித்துள்ளது.

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் நல்லக்கண்ணு இன்று நூறாவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர் நல்லகண்ணு என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் தொடங்கியிருந்தார். இவருடைய கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தியும் அவர்கள் சார்ந்து அறிக்கைகள் விடுவதாலும் விஜய்யின் அரசியல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
விமர்சனம்: அதேசமயம், முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார். இதையடுத்து, அறைக்குள்ளேயே அரசியல் நடத்தினால் போதுமா? "work from home மோட்"டிலேயே விஜய் அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாளையொட்டி, விஜய் தன்னுடைய மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சோதனை: 4 வருடங்களுக்கு முன்பு, விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது, தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை தந்திருந்தது.. அப்போது, விஜய்யை பழிவாங்கும் நடவடிக்கை இது என்று, நல்லகண்ணு கூறியிருந்தார்.
What's Your Reaction?






